Testimony


Dear Brothers and sisters in Christ, Loving greetings in the sweet name of our Lord Jesus Christ. In my life , I Met with a road accident on 29th February, 2000 at 8'o clock in the night. On that night, I was riding a bike with my friend sitting in the pillion on the Madurai –Tirunelveli national highway . A lorry with 3000 bricks (9ton) came in the opposite direction. The lorry came in the wrong side of the road and hit my bike directly. My friend and myself were thrown away from the bike. My friend fell near the road side with very light scratches. I fell in the middle of the road shouting “JESUS” in a loud voice. At that time a Tamilnadu Govt., bus from Madurai was coming in high speed, but the tyres of that bus bursted and it came to a sudden halt before me. It was a great miracle that Lord JESUS saved my life at that place.

Due to that accident, the following bone fractures happened to my right leg.
« Compound Grade3 Fracture Both Bones Right Leg,
« Comminuted Fracture Patella (right)
« Lateral Condylar Fracture Femur(right)

I was admitted to a nearby private hospital in Tirunelveli on that day. Proper treatment was not given to me there. After that I was admitted to the hospital “SUSRUSHA” in Nagercoil, Tamilnadu. On 5.3.2000 a major operation was donefor me. On 14.4.2000 “SKIN GRAFT” operation was done in my right leg. Because of that accident now I am a man of 40% permanent disability.

After that I met with many problems in my life. I was leading a happy and peaceful life before the accident. After that I was pushed to an emptiness. Loneliness surrounded me. Relationship broke. I went to Chennai with only a meager amount of Rs.200 in my hand. I spent many days without food groundnut chikki was my food for several days. After many days I got a job of a car driver in a Christian church. I drove the car with much pain in my legs. Everyday I prayed to JESUS. One day Lord spoke to me. He said,

“WAIT SILENTLY. WAIT ON THE LORD. I WILL RAISE YOU IN APPROPRIATE TIME”. As in (Isaiah-48:10) “Behold I have refined you but not as silver. I have tested you in the furnace of affliction”, Lord Jesus choose me . He gave me peace and happiness in my life. He blessed me in my day-to-day life.

All of you who listen this believe in Jesus. I am a living testimony. As I become a man of 40% permanent disability, this website is started to help those with difficulties and disabilities. If you wish, support this website with your prayers and offerings. May Lord Jesus bless you and your family abundantly.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர / சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில், கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ம் தேதி இரவு 8 மணிக்கு மிகப்பெரிய சாலை விபத்தை சந்திக்க நேர்ந்தது. நானும் எனது நண்பரும் இருசக்கர வாகனத்தில் சாலை ஓரமாக சென்று கொண்டு இருந்தோம். 9 டன் எடையுள்ள, சுமார் 3000 செங்கல் ஏற்றி வந்த லாரி என் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நானும் என் நண்பரும் தூக்கி வீசப்பட்டோம். தூக்கி வீசப்பட்ட நான் "இயேசுவே" என்று உரத்த சத்தத்தோடு நடுரோட்டில் விழும்போது, என்னை நோக்கி வந்த அரசு பேருந்தின் டயர்கள் வெடித்து சிதறி அதே இடத்தில் நின்றுவிட்டது. என் நண்பருக்கு எவ்வித காயமுமின்றி கர்த்தர் காப்பாற்றினார்.

எனது வலது காலில் *Compound Grade3 Fracture Both Bones Right Leg,*Comminuted Fracture Patella (right) *Lateral Condylar Fracture Femur(right) என்ற எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. விபத்து நடந்த அன்று திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நான் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முறையான மருத்துவம் கிடைக்கவில்லை. பிறகு நாகர்கோவிலில் உள்ள சுஸ்ருஸ்ஷா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 5.3.2000 அன்று மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. பிறகு 14.4.2000 அன்று என்னுடைய வலது காலில் ஸ்கின் கிராப்ட் என்ற அறுவை சிகிச்சை நடந்தது. விபத்தின் மூலம் 40% நிரந்தர குறைபாடு உள்ள மனிதனாக மாறிவிட்டேன்.

இதன் விளைவாக பல இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. நல்ல பல வசதிகளோடு வாழ்ந்த நான் இந்த விபத்தின் மூலம் வாழ்க்கையில் வெறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டேன். தனிமையாக்கப்பட்டேன். உறவுகள் முறிந்தது. 200 ரூபாயை வைத்துக்கொண்டு சென்னை வந்தேன். பல நாட்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டேன். கடலை மிட்டாய் மட்டுமே என்னுடைய பல நாட்கள் உணவு. பல நாட்கள் சென்ற பிறகு ஒரு கிறிஸ்தவ தேவ ஆலயத்தில் டிரைவர் வேலைக்கு சேர்ந்தேன். கால்வலியோடு பல இடங்களுக்கு கார் ஓட்டுவேன். தினமும் இயேசு ஸ்வாமியிடம் முறையிடுவேன். ஒரு நாள் தேவன் என்னோடு பேசினார்!. "அமர்ந்திரு, பொறுத்திரு, காத்திரு, ஏற்ற வேளையில் உன்னை உயர்த்துவேன்" என்றார்.

இதோ உன்னை புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன். (ஏசாயா - 48:10)

ஏற்ற வேளையில் தேவன் என்னை தெரிந்துகொண்டார். என்னுடைய வாழ்க்கையில் ஏற்ற சமாதானம் தந்தார். ஆகவே இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் இயேசப்பாவை விசுவாசியுங்கள். நான் ஒரு உயிர் உள்ள சாட்சி. நான் 40% நிரந்தர குறைபாடு உள்ள மனிதனாக மாறியதன் நிமித்தமாக அனேக குறைபாடு உள்ள நல்ல உள்ளங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இணையதளத்தை உங்களால் முடிந்த அளவு தாங்குங்கள். தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!